Perumal Murugan’s statement on being awarded the Samanvay Literature Prize
Kannan Sundaram, Publisher, Kalachuvadu posted the following message from writer Perumal Murugan this morning ( 6 Oct 2015) on his Facebook page. This is regarding the Samanvay Literature Prize conferred upon Perumal Murugan for his novel Madhorubhagan ( One Part Woman) .
சமன்வய் விருது : பெருமாள் முருகன் அறிக்கை :
மாதொருபாகன் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ள இவ்விருது நெடும்
இலக்கியப் பாரம்பரியம் கொண்ட செம்மொழி ஆகிய தமிழுக்குக் கிடைத்திருக்கும்
நவீன அங்கீகாரம் ஆகும். துரதிர்ஷ்டம் நிறைந்திருக்கும் இச்சூழலில் என்
தாய்மொழி அடைந்திருக்கும் இப்பேறு அதன் வரலாற்றில் துருத்தும் மருவாக
அல்ல, ஒளிரும் மணியாக அமையும் என்று நம்புகிறேன். இவ்விருதுக்குக்
காரணமான அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இயற்கையின் இயல்புக்கு மாறாகப்
பெருமாள்முருகனின் நிழலாக மட்டுமே தங்கி உலவும் நான் பெருமைமிகு தருணமாக
இதை உணர்கிறேன். இவ்விருதை எல்லாம் வல்ல இறையாகிய மாதொருபாகனின் பாதக்
கமலங்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
அன்புடன்,
பெ.முருகன்
A.R.Venkatachalapthy has translated the statement into English. This is what it says:
“The Samanvay Award for Madhorubhagan is a modern recognition given to Tamil, a classical language with a long and unbroken literary tradition. This recognition, bestowed on my language at an unfortunate moment, will, I hope, be a shining gem rather than an unsightly wart. I wholeheartedly thank everyone who made this possible. Constrained by force of circumstance to act as the shadow of Perumal Murugan, I feel honoured by this award. I dedicate the Samanvay Award to the lotus feet of the almighty lord Madhorubhagan.”
– P. Murugan, 27 Sep. 2015
6 Oct 2015
No Comments